Saturday, May 8, 2010

ஆ...சோறு சோறு சோறு!!!



இன்று எங்கள் வீட்டில் Potluck! எதுவுமில்ல கூட்டான்சோறு என்று நாம சொல்லுவோம்ல அதேதான். நண்பர்கள் எல்லாரும் அவங்களுக்கு நல்லா செய்ய தெரிஞ்ச சாப்பாட செஞ்சு கொண்டு வந்தாங்க. ரொம்ப நாள் கழிச்சு வயிறு நிறம்ப சாப்பிட்டோம். முக்கியமா இன்னிக்கு விதவிதமான சாப்பாடு.

சரி, நான் என்ன சமச்சேனு கேட்கறீங்களா, ஒன்னும் சமைக்கல. வழக்கம் போல நல்லா கொட்டிகிட்டேன், அவ்வளோதான்! இந்த potluck சமயளுகெல்லாம் commit பண்ணிகரதில்லை. நிச்சயமா சமயலுல சொதப்புவேன். சாப்பாட்டு விஷயத்துல கொஞ்ச நஞ்சமா சொதபிருக்கேன் :)

Onsite கிளம்பும்போது எனக்கிருந்த பெரிய கவலைல, சாப்பாடு கவலையும் ஒன்று. போதும் போதாதைக்கு flightla vegeterian சாப்பாடு காலியாகி கிட்டதட்ட பட்னியாவே வந்திறங்கினேன்.

அடுத்த நாள் காலை மரண பசி. ரூமில் இருக்கற 2 பேருக்கும் சமைக்க தெரியாது. நல்ல வேலை, சுரேஷுக்கு சாதம் வைக்க தெரிந்திருந்தது. Electric cookeril அவன் சாதம் வைப்பதை ஏதோ physics lab experiment மாதிரி கவனித்துகொண்டேன். நம்ம ஊரில் இருந்து வாங்கி வந்த பருப்பு பொடி கைகொடுத்தது. தொட்டுக்க ஊறுகாய். அந்த ஊறுகாய் பாட்டில் மூடியை எங்களால் திறக்க முடியவில்லை. இராமாயணத்தில் சீதை சுயம்வரத்தில் வில்லை தூக்க எல்லா ராஜாவும் கஷ்ட படுவாங்களே அதுபோல. ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்....கையில் கத்தி எடுத்தேன், மூடியில் பெருசா ஓட்டை போட்டு ஒரு வழியா ஊறுகாய் வெளியில் எடுத்தோம்

2 நாள், Bread, தயிர் சாதம் என ஏதோ ஓட்டினோம். அதற்குள் எங்கள் நாக்கு செத்து போயாச்சு. அதன் பின்பு எங்கள் ரூமில் ரிஷி வந்து சேர்ந்தான். மச்சி, கவலைய விடு நான் சமைக்கிறேன் என்றான். அன்று சாம்பார், அட அட என்னமா இருந்துச்சு தெரியுமா!!!! பின் 2 வாரம் ரிஷி சமைக்க, நாங்கள் பாத்திரம் தேய்ப்போம். 2 வாரத்தில் அடிக்கடி hotelirku போய் சாப்பிட்டதால், நாக்கு திரும்ப உயிர் பெற்றது. ரிஷியின் சாம்பார் சாதத்திற்கு WATER RICE என பெயர் வைத்தோம் :)

வாட்டர் ரைசின் கொடுமையிலிருந்து தப்பிக்க நான் சமைக்க ஆரம்பிதேன். வத்தல் குழம்பு!!!. அம்மாவிற்கு phone போட்டு எப்படி செய்ய வேண்டும் என கேட்டுகொண்டேன். நான் செய்த வத்தல் குழம்பு புளி தண்ணீராய் வந்தது. வீட்டில் வாட்டர் ரைஸ் சாப்பிட்டு நொந்து போயிருந்த எங்களுக்கு புளி தண்ணீர் சாதம் ஆறுதலாய் இருந்தது

அடுத்த வாரம் சாம்பார் செய்தேன், ரசமாய் வந்தது. தால் சமைத்த அன்று வீட்டில் எல்லாரும் சாம்பார் நல்லா இருக்கு மச்சின்னு பாராட்டினார்கள். நான் சமைத்தால் சும்மா apartmentey மணக்கும், சாப்பிடத்தான் கொடுமையா இருக்கும் :)

நண்பன் வீட்டிற்கு சென்ற சமயம், அவன் சாம்பார் செய்வதை பார்த்து, Chemistry equation போல சாம்பார் செய்வதிற்கு formulae ஒன்றை மனதில் பதிய வைத்து கொண்டேன்.

வெங்காயம் + தக்காளி + புளி பேஸ்ட் + தண்ணீர் + 2 கப் வேக வைத்த பறுப்பு + சாம்பார் பொடி +மஞ்சள் பொடி + உப்பு gives சாம்பார்.....இது தான் என்னோட base equation :)

அதே formulaaவை சற்று மாற்றி ரசம், daal என ஒவ்வொன்றாக கற்றுகொண்டேன். என்ன பொறியலாக இருந்தாலும் வெங்காயம், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கி வைப்பது வழக்கம். Variety கண்பிக்கனுமே.... அதனால் ஒவ்வொரு காய் கறியையும் ஒவ்வொரு டிசைனாக வெட்டிவிடவேண்டியதுதான் ;). ஏதோ ஒருநாள் தக்காளி இல்லை என்று tomato ketchupil 4 spoon போட்டு சமைச்சு வெச்சுட்டேன். யாரிடமும் சொல்லல..கப் சிப், கமர்கட்!!!

பிறகு தோசை வார்க்க கற்றுகொண்டேன். முதல் தடவை எல்லா தோசையும் பிஞ்சு போய் வந்தது. பிறகு அதுலயும் தேர்ச்சி அடைந்தோம். நான் தோசை செய்தால் முதல் தோசை யாருக்காவது தந்து அவர்களை கவுரவ படுத்துவது வழக்கம் :).... பல நாள் சுரேஷ்தான் அந்த கவுரவமான மனிதன். ஒரு நாள் ஏன் மச்சி எனக்கே எப்போவும் தரன்னு அவன் கேட்க, இல்ல மச்சி முதல் தோசை எப்போவுமே சரியா வராது அதான் உங்களுக்கெல்லாம் தரேன்னு உண்மையை உளறிட்டேன் :)....இப்போதெல்லாம் நானே எனக்கு முதல் தோசை தந்து கவுரவு படுத்திக்கொள்கிறேன் :(

இதுபோல சமையலில் பல காமெடி டைம் நடந்திருக்கு. ஒருசிலருடன் ஒப்பிடும்போது என்னோட சமையல் சொதப்பல்கள் எதுவுமேயில்லை. இதோ சும்மா சாம்பிளிற்கு:

1. சாம்பாரில் 2 கரண்டி மஞ்சள் பொடி போட்டிருக்காங்க நம்ம தோழி

2. நண்பர் காரமா சமைகறேனு அஞ்சு ஸ்பூன் மிளகாய் பொடி போட்டு எங்கள் கண்களை கலங்க வைத்தார்

3. ஒருத்தனுக்கு முதன் முதலில் சமைக்க ஆரம்பித்த பொழுது மஞ்சள் பொடிக்கும் மிளகாய் பொடிக்கும் வித்யாசமே தெரியாது

4. இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா இல்லாமல் ஒருசிலாரால் சமைக்க முடியாது. தயிர் சாதத்திற்கு தாளிக்க சொன்னால் கூட யாருக்கும் தெரியாமல் சேர்த்துவிடுவார்கள்

5. Potluck/ Dinner partyku ஒரு சிலர் பிரியாணி செஞ்சு தரேன்னு hotelil இருந்து திருட்டு தனமாக வாங்கி வைப்பார்கள். நாங்கள் எந்த hotelil வாங்கினாங்கனு மோப்பம் புடிச்சே சொல்லுவோம் :)

நிறைய veggie burger, pizza, pancake, sambaar சாபிட்டு நாக்கிற்கு சொரணை போயாச்சு. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இருக்கும் இந்த Potluck அன்றே சாப்பிட வேண்டும் என்ற ஆசையுடன் சாப்பிடுவோம். மற்ற சமயமெல்லாம் சாப்பிடுவதும் எனக்கு ஒரு Daily task! ஒரு வேலை விதம் விதமா சமைக்க தெரிந்திருந்தால் ???? ஹ்ம்ம் இன்னும் பிசிபேளாபாத், பிரியாணி, பக்கோடா, அசோகா என பல விஷயங்கள் ட்ரை பண்ணனும்

ஓகே ஓகே Moral of the story என்ன? தேவை இல்லாத கம்ப்யூட்டர் language கற்றுகொள்வதக்கு பதிலா சமையல் செய்ய கத்துகங்கப்பா. பாருங்க இப்போ என்னோட horoscope profilela சுமாரா சமைபேனு போட்டு பொண்ணு தேடுவேன். புராணத்துல கூட நளராசாவ , தமயந்தி ஏன் சுயம்வரத்துல செலக்ட் பண்ணினாங்க???...ஏன்னா அவரும் என்ன மாதிரி Cook(er) :) !!!