Sunday, November 20, 2011

சும்மா!!! டைம் Pass

வெட்டி!!! மரண வெட்டி...வழக்கம்போல படம் பார்க்கலாம்னு முடிவு செஞ்சேன். நம்ம சகாக்கள்கிட்ட படத்துக்கு போலாம்னு சொன்னவுடன், மச்சி அந்த ஹீரோ படம்லாம் மசாலா படம்டா, இன்னும் எத்தன நாளுக்குதான் இப்படியே படம் எடுக்க போறாங்களோன்னு அலுத்துகிட்டான்.  

படம் ஆரம்பித்த பத்தாவது Scenela, மச்சி இது இங்கிலீஷ் படத்தோட Copy ; பதினாலாவது scenla இது ஹிந்தி படத்தில் இருந்து சுட்டுட்டானு ஒருத்தன் detective போல பேச ஆரம்பித்தான்!!!

இன்னொருவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு  ஏன் இப்படி பண்ணறான் ???அப்படி செஞ்சா இந்த பிரச்னையே வறாதுனு அவனோட Problem Solving skillslaam என்னிடம் நிருபித்துகொண்டிருந்தான்.

பின் சீட்டிலிருந்து ஒரு சார் சத்தம்போட்டு ஏதோ அவரே சொன்னார்! அவரே சிரித்து கொண்டார்!! கை தட்டினார்!!!!..."கலாய்ச்சிடாராம்"!!!! தன்னை தானே!

cmon yaar ... stupid yaar...யார்...யார் ??? கல்யாணமாகாத ஒரு அம்மையார் !!!...அந்த அவ்வையாரை இம்ப்ரெஸ் செய்வதற்கென்று ஒரு மொக்கை சாமி!!! இதற்குமேல் ஏற்கனவே onlinela OCla படம் பார்த்துவிட்டு அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை முன்பே சொல்லும் முந்திரி கொட்டைகள்....

படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் படத்தை பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள்!  10-15 commercial ஆங்கில திரைப்படங்களை பார்த்துவிட்டு இந்திய சினிமாக்களை அதனுடன் ஒப்பிட்டு பேசும் கும்பல். விவாதங்கள் "நம்ம ஊரு சரி இல்லைப்பா" என்று statement வராமல் இருப்பதே இல்லை !!! அதன்பின் Youtubeil புழங்குகின்ற "COPY CAT" வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் என்ன ஒரு மன நிம்மதி!!!  

நிம்மதியாக ஒரு திரைப்படம் பார்பதற்கு சென்றால் எத்தனை இம்சைகள்....இந்த படிச்சவங்களே இப்படிதான் எஜமான் :-). சத்யம், தேவி ,அபிராமி, ரோகினி , ராக்கி , உதயமென்று ஜாலியா மாஸாகவும், அமைதியாகவும் பார்த்ததுண்டு ....முக்கியமாக ரசித்ததுண்டு.....இப்படி ஒவ்வொரு அசைவிற்கும் லாஜிக் யோசிக்கற அறிவாளி கும்பலுக்குள் மாட்டிகிட்டோமோ? .... ஐயோ!!! ராமா!!! என்ன ஏன் இதுமாதிரி Einsteinoda  DNA sample இருக்கறவங்க கூடலாம் மாட்டிவிடற???

Sunday, August 8, 2010

Darlington Pair

Loyola கல்லூரி, இரவு 11 மணி, சுமார் 1200 இளைஞர்கள் கூடியிருந்தனர். எக்ஸாம் ரிசல்ட் ஒட்ட பட, அனைவரும் புற்றீசல் போல கூடினர். வழக்கம் போல் கூட்ட நெரிசல், பலருக்கு எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும்! சிலர் தேர்ச்சி அடைந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். சந்தோஷமாக இருந்த ஒரு சில 18 வயது விடலை பசங்களில், நானும் ஒருவன். எப்படியாவது என்னுடைய முதல் வேலை தேடும் முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்கு சென்றேன்

மறுநாள் 200 பேருக்கு, Group discussion, Physical Fitness Test. 2 கையில் 10 கிலோ dumbbells தூக்கிக்கொண்டு 200m ஓட வேண்டும்!!! இறுதியில் Junior Engineer வேலைக்கு, 2500 ருபாய் சம்பளத்திற்கு தேர்ச்சி அடைந்தவர்கள் எட்டு பேர்! நல்ல வேளை, அந்த அதிர்ஷ்டசாலி நானில்லை!


அடுத்த முயற்சியில், Technical Interviewil நான் செய்த Project பற்றி கேட்டார்கள். Remote Power Monitoring System... கம்ப்யூட்டர் சார், future சார், Minimal cost ...ஒரே உடான்ஸ்....அடுத்த roundirku தேர்ச்சி அடைந்தேன்!

H.R Roundil என்னுடைய பொழுது போக்கு பற்றி கேட்டார்கள். Cartoon வரைவேன் என்று சொன்னேன். பேப்பரும், பேணாவும் கொடுத்து, H.R வரைய சொன்னார்! நான் அழகா, அற்புதமா அவரோட வழுக்கை தலையை வரைய, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் HR பொசுக்கென்று சிரித்தார்கள்...ஒரு வேளை, நான் வரைய மாட்டேன் என்று சொல்லியிருந்தால் வேலை கிடைத்திருக்குமோ என்னவோ!

அடுத்து ஒரு பெரிய Electronics கம்பெனியின் interview . என்னை Interview செய்ய ஏழு பேர். அவர்கள் கேட்டகேள்விகளுக்கு "பெப்பரப்பனு" முழிச்சேன்.....கடைசியாக, ....Do you Know Darlington Pair"..."Yeah Yeah" என்று சொன்னேன்... கையில் மார்கர் கொடுத்து வரைய சொன்னார்கள்.

நானும் வாங்கிகொண்டு ஒரு Battery, Diode, Resistor ena வரைய முயற்சி செய்தேன்...ஒரு புண்ணியவதி, சிரித்து கொண்டே "Thats Enough" என்றாள் ..."No, I will complete it" என சீன் போட்டேன். எனக்கு, நாக்குல சனி...அந்த Darling சத்தியமா எனக்கு தெரியாதுன்னு சொல்லிருக்கணும்!!!!...பின் 25 நிமிடம், என்னை மரணத்துக்கு கலாய்த்து வெளியில் அனுப்பினார்கள். வீட்டிற்க்கு வந்த மறு கணம், ஒரு மாதமாக அனுப்பாமல் வைத்திருந்த B.E Counselling Form பூர்த்தி செய்தேன்!

B.Tech முடித்தபிறகு, மீண்டும் வேலை தேடும் படலம் ஆரம்பித்தது.

பல முயற்சிகளுக்கு பின்னர் ஒரு Counsaltancyil Walk In. எங்கள் வகுப்பிலிருந்து அனைவரும் சென்றோம். ஜாவா, C, C++, VB என எல்லாவற்றிலும் technical exam.....தோழி ஒருவள், VB என்றால் என்னவென்று தெரியாமல், என்னை பார்த்து copy அடித்தாள். பின் group discussion, ஏதோ சம்பிரதாயத்துக்கு பேசினோம். என்னை பார்த்து எழுதிய பெண் கடைசியில் தேர்ச்சி பெற்றாள்...எனக்கு "மாமா பிஸ்கோத்து" !!!

ஒரு வழியாக 6 மாதம் முன்பு ரெசுமே அணுபியிருந்த கம்பெனியில் இருந்து வேலைக்கு கூப்பிட்டார்கள். 10 நாள் இரா பகலாக அதற்காக பயிற்சி எடுத்தேன். முயற்சி திருவினையாக்கும் !!! சுமார் 2000 பேர் எழுதிய examil, 3௦௦ பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதில் நானும் ஒருவன். எங்கள் வீட்டில் ஒரு சின்ன செண்டிமெண்ட் உண்டு. போர்டு எக்ஸாம் அன்று பழையது சாப்பிட்டு சென்றால், நிறைய மதிப்பெண் வரும்னு :)... பழையது கேட்டு வாங்கி சாப்பிட்டு H.R Interviewku சென்றேன்....பழையது வேலை செய்தது !!! ஆம் ... வேலையும் கிடைத்தது!!! இப்போது எங்கள் குடும்பத்தில் பழைய தயிர் சாதத்திற்கு மவுசு ஜாஸ்தி!!

மைசூரில் trainingற்கு சென்றேன். காதல் கொண்டேன் தனுஷ் போல புது இடம், நண்பர்கள், ஒரு சிலரின் Call Centre trained இங்கிலீஷ் என புது மாற்றத்திற்கு நான் மிரண்டுப்போனேன்! எல்லா வற்றிற்கும் மேலாக MAINFRAME!!!!... எப்படியாவது இந்த வேலைய விட்டிட்டு ஓடிரனும்!!! நம்ம அய்யம்பேட்டைல போய் பட்டு புடவைக்கு சாயம் போடலாம்... இல்லன்னா பஸ் ஸ்டாண்ட் ஓரமா ஒரு பொட்டி கடை..இல்லை இல்லை வீட்டோட மாப்பிள்ளை என பல திட்டம்!!!....................

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேலைக்கு சேர்ந்து 5 வருடம் கடந்த பின்பும் அதே எண்ணத்துடன் COBOL, JCL எழுதி கொண்டிருகின்றேன்! வீட்டோட மாப்பிளை தேவைனா சொல்லுங்க :)

Saturday, May 8, 2010

ஆ...சோறு சோறு சோறு!!!



இன்று எங்கள் வீட்டில் Potluck! எதுவுமில்ல கூட்டான்சோறு என்று நாம சொல்லுவோம்ல அதேதான். நண்பர்கள் எல்லாரும் அவங்களுக்கு நல்லா செய்ய தெரிஞ்ச சாப்பாட செஞ்சு கொண்டு வந்தாங்க. ரொம்ப நாள் கழிச்சு வயிறு நிறம்ப சாப்பிட்டோம். முக்கியமா இன்னிக்கு விதவிதமான சாப்பாடு.

சரி, நான் என்ன சமச்சேனு கேட்கறீங்களா, ஒன்னும் சமைக்கல. வழக்கம் போல நல்லா கொட்டிகிட்டேன், அவ்வளோதான்! இந்த potluck சமயளுகெல்லாம் commit பண்ணிகரதில்லை. நிச்சயமா சமயலுல சொதப்புவேன். சாப்பாட்டு விஷயத்துல கொஞ்ச நஞ்சமா சொதபிருக்கேன் :)

Onsite கிளம்பும்போது எனக்கிருந்த பெரிய கவலைல, சாப்பாடு கவலையும் ஒன்று. போதும் போதாதைக்கு flightla vegeterian சாப்பாடு காலியாகி கிட்டதட்ட பட்னியாவே வந்திறங்கினேன்.

அடுத்த நாள் காலை மரண பசி. ரூமில் இருக்கற 2 பேருக்கும் சமைக்க தெரியாது. நல்ல வேலை, சுரேஷுக்கு சாதம் வைக்க தெரிந்திருந்தது. Electric cookeril அவன் சாதம் வைப்பதை ஏதோ physics lab experiment மாதிரி கவனித்துகொண்டேன். நம்ம ஊரில் இருந்து வாங்கி வந்த பருப்பு பொடி கைகொடுத்தது. தொட்டுக்க ஊறுகாய். அந்த ஊறுகாய் பாட்டில் மூடியை எங்களால் திறக்க முடியவில்லை. இராமாயணத்தில் சீதை சுயம்வரத்தில் வில்லை தூக்க எல்லா ராஜாவும் கஷ்ட படுவாங்களே அதுபோல. ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்....கையில் கத்தி எடுத்தேன், மூடியில் பெருசா ஓட்டை போட்டு ஒரு வழியா ஊறுகாய் வெளியில் எடுத்தோம்

2 நாள், Bread, தயிர் சாதம் என ஏதோ ஓட்டினோம். அதற்குள் எங்கள் நாக்கு செத்து போயாச்சு. அதன் பின்பு எங்கள் ரூமில் ரிஷி வந்து சேர்ந்தான். மச்சி, கவலைய விடு நான் சமைக்கிறேன் என்றான். அன்று சாம்பார், அட அட என்னமா இருந்துச்சு தெரியுமா!!!! பின் 2 வாரம் ரிஷி சமைக்க, நாங்கள் பாத்திரம் தேய்ப்போம். 2 வாரத்தில் அடிக்கடி hotelirku போய் சாப்பிட்டதால், நாக்கு திரும்ப உயிர் பெற்றது. ரிஷியின் சாம்பார் சாதத்திற்கு WATER RICE என பெயர் வைத்தோம் :)

வாட்டர் ரைசின் கொடுமையிலிருந்து தப்பிக்க நான் சமைக்க ஆரம்பிதேன். வத்தல் குழம்பு!!!. அம்மாவிற்கு phone போட்டு எப்படி செய்ய வேண்டும் என கேட்டுகொண்டேன். நான் செய்த வத்தல் குழம்பு புளி தண்ணீராய் வந்தது. வீட்டில் வாட்டர் ரைஸ் சாப்பிட்டு நொந்து போயிருந்த எங்களுக்கு புளி தண்ணீர் சாதம் ஆறுதலாய் இருந்தது

அடுத்த வாரம் சாம்பார் செய்தேன், ரசமாய் வந்தது. தால் சமைத்த அன்று வீட்டில் எல்லாரும் சாம்பார் நல்லா இருக்கு மச்சின்னு பாராட்டினார்கள். நான் சமைத்தால் சும்மா apartmentey மணக்கும், சாப்பிடத்தான் கொடுமையா இருக்கும் :)

நண்பன் வீட்டிற்கு சென்ற சமயம், அவன் சாம்பார் செய்வதை பார்த்து, Chemistry equation போல சாம்பார் செய்வதிற்கு formulae ஒன்றை மனதில் பதிய வைத்து கொண்டேன்.

வெங்காயம் + தக்காளி + புளி பேஸ்ட் + தண்ணீர் + 2 கப் வேக வைத்த பறுப்பு + சாம்பார் பொடி +மஞ்சள் பொடி + உப்பு gives சாம்பார்.....இது தான் என்னோட base equation :)

அதே formulaaவை சற்று மாற்றி ரசம், daal என ஒவ்வொன்றாக கற்றுகொண்டேன். என்ன பொறியலாக இருந்தாலும் வெங்காயம், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கி வைப்பது வழக்கம். Variety கண்பிக்கனுமே.... அதனால் ஒவ்வொரு காய் கறியையும் ஒவ்வொரு டிசைனாக வெட்டிவிடவேண்டியதுதான் ;). ஏதோ ஒருநாள் தக்காளி இல்லை என்று tomato ketchupil 4 spoon போட்டு சமைச்சு வெச்சுட்டேன். யாரிடமும் சொல்லல..கப் சிப், கமர்கட்!!!

பிறகு தோசை வார்க்க கற்றுகொண்டேன். முதல் தடவை எல்லா தோசையும் பிஞ்சு போய் வந்தது. பிறகு அதுலயும் தேர்ச்சி அடைந்தோம். நான் தோசை செய்தால் முதல் தோசை யாருக்காவது தந்து அவர்களை கவுரவ படுத்துவது வழக்கம் :).... பல நாள் சுரேஷ்தான் அந்த கவுரவமான மனிதன். ஒரு நாள் ஏன் மச்சி எனக்கே எப்போவும் தரன்னு அவன் கேட்க, இல்ல மச்சி முதல் தோசை எப்போவுமே சரியா வராது அதான் உங்களுக்கெல்லாம் தரேன்னு உண்மையை உளறிட்டேன் :)....இப்போதெல்லாம் நானே எனக்கு முதல் தோசை தந்து கவுரவு படுத்திக்கொள்கிறேன் :(

இதுபோல சமையலில் பல காமெடி டைம் நடந்திருக்கு. ஒருசிலருடன் ஒப்பிடும்போது என்னோட சமையல் சொதப்பல்கள் எதுவுமேயில்லை. இதோ சும்மா சாம்பிளிற்கு:

1. சாம்பாரில் 2 கரண்டி மஞ்சள் பொடி போட்டிருக்காங்க நம்ம தோழி

2. நண்பர் காரமா சமைகறேனு அஞ்சு ஸ்பூன் மிளகாய் பொடி போட்டு எங்கள் கண்களை கலங்க வைத்தார்

3. ஒருத்தனுக்கு முதன் முதலில் சமைக்க ஆரம்பித்த பொழுது மஞ்சள் பொடிக்கும் மிளகாய் பொடிக்கும் வித்யாசமே தெரியாது

4. இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா இல்லாமல் ஒருசிலாரால் சமைக்க முடியாது. தயிர் சாதத்திற்கு தாளிக்க சொன்னால் கூட யாருக்கும் தெரியாமல் சேர்த்துவிடுவார்கள்

5. Potluck/ Dinner partyku ஒரு சிலர் பிரியாணி செஞ்சு தரேன்னு hotelil இருந்து திருட்டு தனமாக வாங்கி வைப்பார்கள். நாங்கள் எந்த hotelil வாங்கினாங்கனு மோப்பம் புடிச்சே சொல்லுவோம் :)

நிறைய veggie burger, pizza, pancake, sambaar சாபிட்டு நாக்கிற்கு சொரணை போயாச்சு. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இருக்கும் இந்த Potluck அன்றே சாப்பிட வேண்டும் என்ற ஆசையுடன் சாப்பிடுவோம். மற்ற சமயமெல்லாம் சாப்பிடுவதும் எனக்கு ஒரு Daily task! ஒரு வேலை விதம் விதமா சமைக்க தெரிந்திருந்தால் ???? ஹ்ம்ம் இன்னும் பிசிபேளாபாத், பிரியாணி, பக்கோடா, அசோகா என பல விஷயங்கள் ட்ரை பண்ணனும்

ஓகே ஓகே Moral of the story என்ன? தேவை இல்லாத கம்ப்யூட்டர் language கற்றுகொள்வதக்கு பதிலா சமையல் செய்ய கத்துகங்கப்பா. பாருங்க இப்போ என்னோட horoscope profilela சுமாரா சமைபேனு போட்டு பொண்ணு தேடுவேன். புராணத்துல கூட நளராசாவ , தமயந்தி ஏன் சுயம்வரத்துல செலக்ட் பண்ணினாங்க???...ஏன்னா அவரும் என்ன மாதிரி Cook(er) :) !!!

Friday, April 30, 2010

போட்டிக்கு பிள்ளை :)

ஹ்ம்ம்ம்.....எல்லாருக்கும் வணக்குமுங்கோ.....ஆமாம் நானும் blogikaraen :) எல்லாரும் கருத்த பரிமாரரேனு எழுதறாங்க, சரி நாமளும் எழுதலாம்னு ஒரு எண்ணம் வந்திருச்சு. இது என்னோட 2 வது முயற்சி. இதை யாரு படிக்கப் போறாங்கன்னு தெரியாது, But நிச்சயமா நெருங்கிய நண்பர்கள் ஒரு முறையாச்சு படிப்பாங்கன்னு ஒரு அசட்டு நம்பிக்கை. என்னோட ஒவ்வொரு முயற்சிகளிளையும் நம்ம சகாக்கள் நல்ல criticaa இருந்திருக்காங்க. இந்த ப்ளாக் விஷயத்துலயும் அப்பப்ப உசுபேத்தி, கண்டிச்சு, கலாய்ச்சு நிறைய எழுதவைங்கப்பா!!!!

சரி, ப்ளாக் ஆரம்பிச்சாச்சு எதை பற்றி எழுதறது??? வழக்கம் போல முக்கால்வாசி மக்கள் மாதிரி நானும் காதல் காதல் காதல்னு எழுதவா? இல்ல என்னோட கற்பனை கதைகள்......(ஐயோ அம்மான்னு அலறர்து எனக்கு கேட்குது :) )....ஓ.கே நான் கவிதை மட்டும் இப்போதைக்கு எழுதல :).... கவிதைங்கற பேருல "உன் மேல பூ விழுந்தா என்னால் தாங்க முடியாது" "உன் கண்ணுல தூசி விழுந்துசுனா பூமி இருண்டு போச்சு", "நீ என்னை பிரிந்தால் நான் நடக்கும் கோமா நோயாளி ஆவேன்" அப்படினுலாம் எழுதனும்...இல்ல இல்ல முயற்சி செய்தால் மார்கபந்து...ச்சி, ச்சி மார்கமுண்டு. ஸ்ரீகூட பாரதி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து மாதிரி எழுதலாம், மு.ய.ற்.சி செய்தால்! நான் தமிழ் வெண்பா சாகறதுக்குள்ள எழுதனும்னு ஒரு பேராசை உண்டு! நிறைய பேர் "வென்பானா" T.Rajendar போல rhymesnu யோசிக்கரோம்ல ....எனக்கும் வென்பானா என்னனு தெரியாது, மனசுல தோணிச்சு எழுதிட்டேன். இனிமேதான் Google செஞ்சு அத கத்துக்கணும்.

ஓகே ஓகே, தலைப்பு வெச்சுட்டேன், அது சம்பந்தமா ஏதாச்சு எழுதனுமே!. S.Ve.Sekar சம்பந்தமே இல்லாம "காத்துல மழை, காத்துல மழைன்னு" நாடகத்து நடுவில் கத்துவார். நாடகம் பேரு dialogla வரணுமாம். அதான் இப்போ நினைவுக்கு வருது. இந்த தலைப்பு ஏன் வெச்சேன்னு எனக்கு மறந்து போச்சு. அடுத்த முறை எல்லாத்தையும் எழுதிட்டு டைட்டில் வெக்கணும். Blog#2 கற்றுக்கொண்ட பாடம் !!!

படிப்பு, வேலைக்கு அப்பாற்பட்டு நான் எழுதிய தருணங்களை யோசிச்சு பார்கிறேன். சிறுவர்மலர், கன்னித்தீவு, அம்புலிமாமா, Tinkle என படித்து கொண்டிருந்த வேலை. நானும் கதை எழுதறேன் என்று கதை எழுதி அனுப்பினேன். எதுவுமில்ல நம்ம Harry Potter, அலாவுதீன் அற்புத விளக்கு பாணியில் ஒரு மாயஜால கதை. கதை அனுப்பிய பிறகு என்னோட கதை ஏதாவது ஒரு வாரம் வரும் என்ற ஆவல், ஏமாற்றம், அடுத்த வாரம் போடுவார்கள் என்ற நம்பிக்கை என மூன்று மாதம் கடந்தது...பிறகு நானும் என்னுடைய கதையை மறந்து போயாச்சு.

பின்பு ஒரு நாள் வீட்டிற்கு ஒரு பெரிய பார்சல் வந்தது....தமிழ் பட ஹீரோக்கு நடப்பதுபோல என்னோட கதை முதல் பரிசெல்லாம் வாங்கவில்லை. என்னோட அபரீதமான கற்பனைக்கு கார்டூன் வரைவது கஷ்டம் என்பதால் கதை publish பண்ண முடியவில்லை என்று அங்கிள் பை (Editor) லெட்டர் எழுதி அனுப்பினார். கூடவே நீ முயற்சி செஞ்சா நல்ல எழுத்தாளர் ஆவ அப்படின்னு சொல்லியிருந்தார். நிறைய கதை புத்தகங்கள் பரிசாக அனுபியுமிருந்தார். அன்று முழுதும் என் அப்பா அம்மாவின் முகத்தில் தெரிந்த ஆனந்தம் இன்றளவும் எனது நினைவில் உலவிகொண்டிருகிறது.

அதன் பின்பு பதினான்கு வருடம் கழித்து திரும்ப எழுதனும் என்கிற ஆசை. Orkut Communityil எழுதி நண்பர்களை படிக்க சொல்லி தொல்லை கொடுத்திருக்கிறேன் ... இப்போ Blog! மக்களே நீங்க அழிஞ்சீங்க!!! எனக்கு சாதகமா இருக்கற ஒரே விஷயம் Blogspotil அங்கிள் பை போல எடிட்டர் நான் எழுதறத publish பண்ணாம தடுக்க முடியாது :)...இன்னொன்னு இத விட கண்றாவியான ப்லோக்லாம் நான் படிச்சிருக்கேன், நீங்களும் படிச்சிருப்பீங்க:)...

கிறுக்கல்கள் தொடரும் !!!