Loyola கல்லூரி, இரவு 11 மணி, சுமார் 1200 இளைஞர்கள் கூடியிருந்தனர். எக்ஸாம் ரிசல்ட் ஒட்ட பட, அனைவரும் புற்றீசல் போல கூடினர். வழக்கம் போல் கூட்ட நெரிசல், பலருக்கு எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும்! சிலர் தேர்ச்சி அடைந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். சந்தோஷமாக இருந்த ஒரு சில 18 வயது விடலை பசங்களில், நானும் ஒருவன். எப்படியாவது என்னுடைய முதல் வேலை தேடும் முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்கு சென்றேன்
மறுநாள் 200 பேருக்கு, Group discussion, Physical Fitness Test. 2 கையில் 10 கிலோ dumbbells தூக்கிக்கொண்டு 200m ஓட வேண்டும்!!! இறுதியில் Junior Engineer வேலைக்கு, 2500 ருபாய் சம்பளத்திற்கு தேர்ச்சி அடைந்தவர்கள் எட்டு பேர்! நல்ல வேளை, அந்த அதிர்ஷ்டசாலி நானில்லை!
அடுத்த முயற்சியில், Technical Interviewil நான் செய்த Project பற்றி கேட்டார்கள். Remote Power Monitoring System... கம்ப்யூட்டர் சார், future சார், Minimal cost ...ஒரே உடான்ஸ்....அடுத்த roundirku தேர்ச்சி அடைந்தேன்!
H.R Roundil என்னுடைய பொழுது போக்கு பற்றி கேட்டார்கள். Cartoon வரைவேன் என்று சொன்னேன். பேப்பரும், பேணாவும் கொடுத்து, H.R வரைய சொன்னார்! நான் அழகா, அற்புதமா அவரோட வழுக்கை தலையை வரைய, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் HR பொசுக்கென்று சிரித்தார்கள்...ஒரு வேளை, நான் வரைய மாட்டேன் என்று சொல்லியிருந்தால் வேலை கிடைத்திருக்குமோ என்னவோ!
அடுத்து ஒரு பெரிய Electronics கம்பெனியின் interview . என்னை Interview செய்ய ஏழு பேர். அவர்கள் கேட்டகேள்விகளுக்கு "பெப்பரப்பனு" முழிச்சேன்.....கடைசியாக, ....Do you Know Darlington Pair"..."Yeah Yeah" என்று சொன்னேன்... கையில் மார்கர் கொடுத்து வரைய சொன்னார்கள்.
நானும் வாங்கிகொண்டு ஒரு Battery, Diode, Resistor ena வரைய முயற்சி செய்தேன்...ஒரு புண்ணியவதி, சிரித்து கொண்டே "Thats Enough" என்றாள் ..."No, I will complete it" என சீன் போட்டேன். எனக்கு, நாக்குல சனி...அந்த Darling சத்தியமா எனக்கு தெரியாதுன்னு சொல்லிருக்கணும்!!!!...பின் 25 நிமிடம், என்னை மரணத்துக்கு கலாய்த்து வெளியில் அனுப்பினார்கள். வீட்டிற்க்கு வந்த மறு கணம், ஒரு மாதமாக அனுப்பாமல் வைத்திருந்த B.E Counselling Form பூர்த்தி செய்தேன்!
B.Tech முடித்தபிறகு, மீண்டும் வேலை தேடும் படலம் ஆரம்பித்தது.
பல முயற்சிகளுக்கு பின்னர் ஒரு Counsaltancyil Walk In. எங்கள் வகுப்பிலிருந்து அனைவரும் சென்றோம். ஜாவா, C, C++, VB என எல்லாவற்றிலும் technical exam.....தோழி ஒருவள், VB என்றால் என்னவென்று தெரியாமல், என்னை பார்த்து copy அடித்தாள். பின் group discussion, ஏதோ சம்பிரதாயத்துக்கு பேசினோம். என்னை பார்த்து எழுதிய பெண் கடைசியில் தேர்ச்சி பெற்றாள்...எனக்கு "மாமா பிஸ்கோத்து" !!!
ஒரு வழியாக 6 மாதம் முன்பு ரெசுமே அணுபியிருந்த கம்பெனியில் இருந்து வேலைக்கு கூப்பிட்டார்கள். 10 நாள் இரா பகலாக அதற்காக பயிற்சி எடுத்தேன். முயற்சி திருவினையாக்கும் !!! சுமார் 2000 பேர் எழுதிய examil, 3௦௦ பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதில் நானும் ஒருவன். எங்கள் வீட்டில் ஒரு சின்ன செண்டிமெண்ட் உண்டு. போர்டு எக்ஸாம் அன்று பழையது சாப்பிட்டு சென்றால், நிறைய மதிப்பெண் வரும்னு :)... பழையது கேட்டு வாங்கி சாப்பிட்டு H.R Interviewku சென்றேன்....பழையது வேலை செய்தது !!! ஆம் ... வேலையும் கிடைத்தது!!! இப்போது எங்கள் குடும்பத்தில் பழைய தயிர் சாதத்திற்கு மவுசு ஜாஸ்தி!!
மைசூரில் trainingற்கு சென்றேன். காதல் கொண்டேன் தனுஷ் போல புது இடம், நண்பர்கள், ஒரு சிலரின் Call Centre trained இங்கிலீஷ் என புது மாற்றத்திற்கு நான் மிரண்டுப்போனேன்! எல்லா வற்றிற்கும் மேலாக MAINFRAME!!!!... எப்படியாவது இந்த வேலைய விட்டிட்டு ஓடிரனும்!!! நம்ம அய்யம்பேட்டைல போய் பட்டு புடவைக்கு சாயம் போடலாம்... இல்லன்னா பஸ் ஸ்டாண்ட் ஓரமா ஒரு பொட்டி கடை..இல்லை இல்லை வீட்டோட மாப்பிள்ளை என பல திட்டம்!!!....................
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேலைக்கு சேர்ந்து 5 வருடம் கடந்த பின்பும் அதே எண்ணத்துடன் COBOL, JCL எழுதி கொண்டிருகின்றேன்! வீட்டோட மாப்பிளை தேவைனா சொல்லுங்க :)
COBOL, JCL oda blogum ezhudhindruka.. :) Way to go bro!! apdiye knjm spelling errorsum paathuko..//அடித்தால், பெற்றால்// :))
ReplyDeletehey...nice read...
ReplyDeletefunny one...
gud one!!! super.
ReplyDeletenithya, thankoo thankoo....nee sonna spelling mistake correct panitaen!!! innum nerayaa irukum kandupudichu list anuparavangaluku thanguntha mariyaathai alikappadum :)
ReplyDelete@Betsy & Suren... kashta pattu padichadukku NANRI :)
Sri, Read it. Very deep thoughts. All jobs are the same. Don't expect to enjoy it. Taguntha mariyadainnu kaetta bayama irukku, but one spelling error still lurks!!
ReplyDeleteactually i like this ''பெப்பரப்பனு'' :P funny u!
ReplyDeleteIppo nenachu paaka funny......Koundamani adi vaangitu ukkandiruka maadiri ukkandirundaen....Velilavidungadaaa saamin....kelvi kanaigalnaa ennanu anniku daan therinjukittaen.....ennavo enkittendu ethir paathirukaanunga illanaa avalo kelvi ketturuka maataanga
ReplyDeleteLOL..nee avlo buildup kuduthurpa..
ReplyDeletehahaha nice one...
ReplyDeleteNice to read.... yetha maathiriyae oru picture potathum nalla irukku...
ReplyDeleteNanri Ahila :) !
ReplyDelete